Thursday, January 11, 2018

 

Benefits of Ghee-Tamil

தினமும் காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டா எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா?

காலையில் எழுந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பழக்கத்தை அன்றாடம் மேற்கொள்வார்கள். அதில் பெரும்பாலானோர் டீ அல்லது காபி குடிப்பதாக கூறுவர். ஆனால் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் டீ, காபி குடிப்பதற்கு முன் வெறும் வயிற்றில் சுடுநீரில் தேன் கலந்து குடிப்பார்கள் அல்லது வேறு ஏதேனும் ஆரோக்கிய பானத்தைக் குடிப்பார்கள்.

ஆனால் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா? ஆம், பல ஆய்வுகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் படி, காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக கூறுகின்றன.

அதுவும் அதிகாலையில் ஒரு ஸ்பூன் நெய் உட்கொண்டு, பின் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால், நாம் நினைத்திராத அளவில் உடல் ஆரோக்கியம் மேம்படுமாம். இக்கட்டுரையில் காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆயுர்வேதத்தின் படி, நெய்யை ஒருவர் வெறும் வயிற்றில் எடுக்கும் போது, அது உடலினுள் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஊட்டமளித்து சீராக இயங்கச் செய்யுமாம். ஆகவே உடற்செல்கள் புத்துணர்ச்சி பெறவும், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுங்கள்.
சரும செல்களை ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் வைத்துக் கொள்ளும் திறன் நெய்க்கு உள்ளது. ஒருவரது உடலில் செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், சருமம் பொலிவோடு காட்சியளிக்கும். முக்கியமாக சருமம் வறட்சியடையாமல் மென்மையாக இருக்கும். அதுமட்டுமின்றி சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளும் குணமாகும்.

நெய் ஒரு நேச்சுரல் லூப்ரிகண்ட். ஆகவே இது மூட்டு இணைப்புக்கள் மற்றும் திசுக்கள் தொய்வடைவதைத் தடுத்து தடுத்து, மூட்டு வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். முக்கியமாக நெய்யில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கும்.
நெய்யை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் மூளைச் செல்கள் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, மூளையில் உள்ள நரம்புகள் சரியாக தூண்டப்பட்டு நினைவாற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும். அதோடு அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்கள் வராமலும் தடுக்கப்படும்.

பெரும்பாலானோர் நெய் உடல் பருமனை அதிகரிக்க மட்டுமே செய்யும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தினமும் காலையில் 1 ஸ்பூன் நெய் உட்கொள்வதால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு உடல் எடை தான் குறையும்.

நெய்யை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மயிர்கால்கள் ஊட்டம் பெற்று, தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படும். அதோடு தலைமுடி மென்மை மற்றும் பட்டுப் போன்று ஆவதோடு, தலைமுடி உதிர்வதும் தடுக்கப்படும்.
லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டவர்கள், பாலில் இருந்து பெறப்படும் நெய்யை சாப்பிட அஞ்சுவார்கள். ஆனால் உண்மையில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நெய்யில் லாக்டோஸ் மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதால், அது எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்தாது.

நெய்யில் புற்றுநோய் செல்களை அழிக்கும் உட்பொருட்கள் உள்ளது. ஆகவே ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் நெய்யை சாப்பிட புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.


This page is powered by Blogger. Isn't yours?