Thursday, August 31, 2017
History of dindigul in tamil
திண்டுக்கல் என்றவுடன் ஞாபகம் வருவது கமகமக்கும் பிரியாணியும், பூட்டும் மட்டுமல்ல, மலைக்க வைக்கும் மலைக்கோட்டையும்தான்.
மதுரை முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் 1605 இல் கட்டினார்
இந்த மலைக்கோட்டை பல வரலாற்று போர்களையும், சுதந்திர போராட்ட வடுக்களையும் தாங்கி நிற்கிறது. இருப்பினும் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் தெரியாது. ஏனோ கண்டு கொள்ளவும் அவர்களுக்கு ஆர்வமில்லை. திண்டுக்கல்லில் பல வரலாறுகள் பின்னிப் பிணைந்துள்ளன. இவற்றை கேட்டாலும், நிகழ்வுகள் நடந்த இடத்தை பார்த்தாலும் சுவையாகவும், பெருமையாகவும் இருக்கும். ஆனால், நகர வளர்ச்சியால் பல வரலாற்று சுவடுகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. எனவே இதனை சுற்றுலா தலமாக்கினால், அதிகளவு வருமானம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மலைக்கோட்டை
திண்டுக்கல் மலைக்கோட்டை கடல் மட்டத்தில் இருந்து 360 அடி உயரத்தில், 400 மீட்டர் நீளத்திலும், 300 மீட்டர் அகலத்திலும் அமைந்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்தவர்கள் மதுரைக்கு நுழையும் வாயில் பகுதியாக அப்போது திண்டுக்கல் இருந்தது.
மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள் திண்டுக்கல் மலை மீது கோட்டையை கட்டி பாதுகாப்பு அரண் அமைத்தனர். 1605ல் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் கோட்டையை கட்டினார். பின்பு கடந்த 1623 முதல் 1659 வரை திருமலை நாயக்கர் இந்த கோட்டையை ஆட்சி செய்தார்.
மராட்டியர்கள் படையெடுப்பிற்கு பின்பு நாயக்கர் ஆட்சி இறக்கப்பட்டது. பின்பு மைசூர் உடையார்கள் படையெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் மைசூருவை சேர்ந்த ஹைதர் அலி 1755ல் திண்டுக்கல் படைக்கு 'பவுத்ஜ்தாராக' நியமிக்கப்பட்டார். ஹைதர்அலி 1766ல் கோட்டையை பிடித்து ஆட்சி செய்தார். அவர் காலத்தில்தான் கோட்டைப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது.
திப்புசுல்தான்
கடந்த 1755ல் ஹைதர்அலி தனது மனைவி, மகன் திப்புசுல்தானுடன் திண்டுக்கல்லில் குடியேறினார். 1784 முதல் 1790ம் ஆண்டு வரை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இவரது படைத்தளபதி சையது இப்ராகிம் சாகிப் மூலம் திண்டுக்கல் மலைக்கோட்டை சிறைகூடம், பீரங்கித்தளம் ஆகியவை முழுவை பெற்று, புதுப்பிக்கப்பட்டது. பிரஞ்ச் கட்டடக்கலை அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.
பிரிட்டிஷார் வசமானது
கடந்த 1860ம் ஆண்டு பிரிட்டிஷாரிடம் திப்புசுல்தான் தோற்றதையடுத்து கோட்டை பிரிட்டிஷார் வசமானது. பின்பு படை பாதுகாப்பு அரணாகவே விளங்கியது.
சுனைகள்
மலைக்கோட்டை மேலே நீர் சுனைகள் உள்ளன. இது சிறைக்காவலர்கள் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது.
அகழிகள்:
மலைக்கோட்டையை சுற்றி கோட்டைக் குளம், அய்யன் குளம் என அகழிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அய்யன் குளத்தை குதிரை லாயமாக பயன்படுத்தினர். இதன் மூலம் எதிரிகள் மேலே செல்ல முடியாமல் தடுக்கப்பட்டது.
கல்வெட்டு உள்ளது
மலைக்கோட்டையில் தம்பிரான் சுவாமிகள் கல்வெட்டு உள்ளது. இதில் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் கோயிலுக்கும், பொதுமக்களுக்கும் அளித்துள்ள நன்கொடை தெரிவிக்கப்பட்டுள்ளது. 1790 மைசூர் யுத்தம் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
தாலுகா சமாதி
தற்போது திண்டுக்கல் மேற்கு தாலுகாவாக இருக்கும் இடம், இறந்த வீரர்களை புதைக்கும் இடமாக இருந்தது. மேலும் கோட்டை மேலாளராக இருந்த பிரிட்டிஷார் சமாதியும், தாலுகா அலுவலகம் அருகேயுள்ளது.
கோபால சமுத்திரம் குளம்
திண்டுக்கல்லில் தற்போது நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும், மழை நீர் சேகரிப்பு மையமாகவும் இருப்பது கோபால சமுத்திரக்கரை. இந்த இடத்திலும் பல வரலாற்று சிறப்புகள் புதைந்து கிடக்கிறது.
திண்டுக்கல்லில் வேலுநாச்சியார்
ஆங்கிலேயேரை எதிர்த்து போருக்கு கிளம்பிய முதல் இந்திய பெண்ணரசி சிவகங்கை அரசி வேலுநாச்சியார். இவருக்கு ஏழு மொழிகள் தெரியும். போர்கலைகள் பலவும் கற்று தேர்ந்தவர்.
கடந்த 1746ல் தனது 16 வயதில் அப்போதைய சிவகங்கை மன்னராயிருந்த முத்து வடுகநாத துரையை மணந்தார். முத்துவடுகநாதரின் படைதளபதிகள் பெரியமருது, சின்னமருது.
18ம் நுாற்றாண்டில் தமிழகம் பல்வேறு ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கித் தவித்தது.
சிவகங்கையில் தமது வியாபார உரிமையை நிலை நாட்டுவதில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது. ஆங்கிலேயரின் எதேச்சதிகாரம் பிடிக்காத சிவகங்கை மன்னரோ பிரெஞ்சுகாரர்களை தேர்வு செய்து விட, ஆங்கிலேயருக்கு கோபம் உண்டானது. இதனால் சிவகங்கையின் மீது ஆங்கிலேய கர்னல்கள் ஜோசப் ஸ்மித், பான்ஜோர் தலைமையில் போர் தொடுத்தனர். இந்த போரில் மருது சகோதரர்கள் தலைமையில் சிவகங்கை படைகள் வீரத்துடன் ஆங்கிலப்படைகளை எதிர்த்து நின்றன.
இந்த போரில் வேலுநாச்சியார் தாமே போர்க்களத்துக்கு வந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார். ஆனால் முடிவோ துயரமானதானது. அரசர் முத்து வடுகநாதனை, ஆங்கிலேயர்கள் ஏமாற்றி போர்க்களத்தின் முன்னணிக்கு வரவழைத்து வஞ்சமாக கொன்றுவிட்டனர். இதன் பின்பு சிவகங்கை படை அழிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் தஞ்சம்
வேலுநாச்சியார் தனது மகள் வெள்ளை நாச்சியாருடன், நம்பிக்கைக்கு தகுந்த அமைச்சர் தாண்டவராயருடன் தப்பிச் சென்று திப்புசுல்தான் எல்லைக்குட்பட்ட திண்டுக்கல்லில் தஞ்சம் அடைந்தார். திப்புசுல்தான் ஆதரவோடு திண்டுக்கல் விருப்பாச்சி கோபால்நாயக்கர் உதவியுடன் அய்யம்பாளையத்தில் மறைந்து வாழ்ந்தார். சிவகங்கை பகுதி, ஆங்கிலேயர்களின் கூட்டாளியான ஆற்காடு நவாப்பின் கைக்கு சென்றது. மக்கள் புரட்சி செய்தனர். ஏழு ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்த வேலுநாச்சியார் இந்த புரட்சிக்கு தலைமை வகித்தார்.
போரில் உதவி
இந்த நேரத்தில் திப்புசுல்தானும், கோபால நாயக்கரும் 5,000 குதிரை வீரர்களையும், 5,000 தரைப்படையினரையும், பீரங்கிப்படையின் ஒரு பிரிவையும் அனுப்பி வைத்தனர்.
படை வென்றது
கடந்த 1780ம் ஆண்டு அக்.,17ம் தேதி வேலுநாச்சியார் தலைமையில் மருதுபாண்டியர் தளபதிகளாக செயல்பட்ட படை, சிவகங்கையை பிடித்தது. இந்த வெற்றிக்கு காரணம் கோபால் நாயக்கரும், திப்பு சுல்தான் படைகளும்தான்.
படைகள் ஓய்வெடுத்த குளம்
வேலு நாச்சியாருக்கு அனுப்பி வைத்த 5 ஆயிரம் படை வீரர்களும், குதிரைகளும் தண்ணீர் குடிப்பதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் தோண்டப்பட்ட குளம்தான் கோபால் நாயக்கர்
சமுத்திரக் குளம். இந்த குளம் வெட்டுவதற்கு கோபால்நாயக்கர்தான் தலைமை வகித்தார். இந்த குளத்திற்கு நடுவில் 2 கிணறுகளும் வெட்டப்பட்டது.
- -எஸ்.அரியநாயகம்- - படம்: ஏ.ரவிச்சந்திரன்
அபிராமியம்மன் கோயில்
விஜயநகர ஆட்சியில் அபிராமியம்மன் கோயில் கட்டப்பட்டது. செதுக்கப்பட்ட துாண்கள், அழகாகவும், விஜயநகர பேரசின் கட்டட கலையை விளக்கும் சிற்பங்களும் உள்ளன. பறவைகள், விலங்குகள், தாவரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோபுரம், சுற்று பிரகாரம், அர்த்த மண்டபத்தில் பல சிற்பங்கள் பொதிந்து கிடக்கின்றன. பல கலை சிற்பங்களும் உருவாக்கப்பட்டது. இந்த கோயிலுக்கு வருவது போல எதிரிகள் மலைக்கோட்டை வரக்கூடும் என்பதால், அபிராமியம்மன் கோயில் அடிவாரத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் அடிவாரத்தில் திப்புசுல்தான் ஒரு பள்ளிவாசலையும் ஏற்படுத்தினார்.
பாறை மீது சிறைக்கூடம்
இங்கு பாறைகள் நடுவே சிறைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரும்பு கதவுகள், மேற்பரப்பில் புகை போக்கி, பாதாள சிறையில் 20 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்குள் சூரிய வெளிச்சம் இருக்காது. புகை போக்கி வழியாக காற்று உள்ளே புகும். மேற்பரப்பில் செங்கல், சுண்ணாம்பு, கடுக்காய் கொண்டு பூசப்பட்டு இருக்கும்.
கோபால் நாயக்கருக்கு துாக்கு
சிவகங்கை வேலுநாச்சியாருக்கு உதவியது, ஆங்கிலேயரை தீரமுடன் எதிர்த்து போரிட்டது ஆகிய காரணங்களுக்காக கோபால நாயக்கருடன் ஆங்கில அரசு போர் தொடுத்தது. இதில் முதலில் வெற்றி பெற்றாலும், வஞ்சக வலை விரித்து கோபால நாயக்கரை ஆங்கில அரசு கடந்த 5.9.1801ல் கைது செய்தது. மறுநாள் கோபாலசமுத்திரக்கரையில் உள்ள புளியமரத்தில் துாக்கிலிட்டனர். அதன்பின் இந்த குளம் கோபாலசமுத்திரக்குளம் என பெயர் பெற்றது.
குடிநீர் ஆதாரமானது
இந்த குளம் நாளடைவில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமானது. பின்பு ஆடு, மாடுகள் குளிக்கும் இடமாக மாறியது. நாளடைவில் கழிவு நீர் கலந்து குளம் மாசுபட்டது.
சீரமைப்பு
திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் ரூ.1.50 கோடி செலவில் குளத்தை மழைநீரை சேகரிக்கும் மையமாக மாற்றியுள்ளது. இந்த குளத்தை சுற்றி நடைப்பயிற்சி செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழிவு நீர் கலப்பது சுத்தமாக தடுக்கப்பட்டுள்ளது. மேலும் 108 நன்மை தரும் விநாயகர் கோயில் மற்றும் 'திண்டிமா வனம்' அமைப்பினர் மூலம் குளத்தை சுற்றி நிழல் மற்றும் பலன் தரும் மரங்கள் நடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தகவல்கள் பெற 98421 -31524ல் தொடர்பு கொள்ளலாம்.
எத்திசை வந்தாலும் கண்காணிப்பு
திண்டுக்கல் மலைக்கோட்டை மீது மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டையில் தங்கும் சிப்பாய்கள், கோட்டையை சுற்றி வட்ட வடிவில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் இருந்து எதிரிகள் எத்திசையில் வந்தாலும் பார்க்க முடியும். மேலும் அவர்களை நோக்கி பீரங்கிகளும் வைக்கப்பட்டுள்ளன. தற்போதும் பிரிட்டிஷாரின் பீரங்கியுள்ளது.
வீரர்கள் கண்காணிப்பு கோபுரம்
எதிரி படைகள் வருவதையும், உள்ளே வீரர்கள், கைதிகள் செயல்பாட்டையும் கண்காணிக்க ஆளுயரத்தில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நின்று கொண்டே கண்காணிக்கலாம். கூண்டுக்குள் ஆள் நிற்பது வெளியே தெரியாது. வீரனின் கண்கள் வெளியே பார்க்க ஓட்டைகள் உள்ளன. வெளியில் இருந்து பார்த்தால் படைகலன் இருப்பது தெரியும். இதில் ஆயுத சேமிப்பு கிடங்கும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் வசிப்பதற்கும் தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
உமாராணி சுற்றுலாத்துறை அதிகாரி.
Benefits of garlic in tamil
வறுத்த பூண்டை சாப்பிடுவதால் இவ்வளவு அதிக நன்மைகளா?.
- இயற்கை மருத்துவம்*
வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணி நேரத்தில் உடலினுள் பல்வேறு அற்புதங்களை செய்யும். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
*1. பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.
*2. பூண்டுகள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும்.
*3. வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.
*4. 2 முதல் 4 மணி நேரத்தில் பூண்டு உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.
*5. 4 முதல் 6 மணி நேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப் பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.
*7. 6 முதல் 7 மணிநேரத்தில் பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்..
*8. 7 முதல் 10 மணிநேரத்தில் பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.
*9. 10 முதல் 24 முதல் 1 மணிநேரத்தில் பூண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்து விடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.
அவையாவன :
* கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும்.
* தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
* இரத்த அழுத்தத்தை சீராக்கும்.
* உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
* உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.
* எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
* அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.
Wednesday, August 30, 2017
Tips about herbs in tamil
🌿 *இயற்கை 🍶 மருத்துவம்*🌿
*இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளும் அதன் பயன்களும்*
*இயற்கை மருத்துவம்*
இயற்கை மருத்துவம் என்றால் உணவே மருந்து. மூலிகைகள் சாதாரணமாக பக்க விளைவுகள் இல்லாதவை. மேலும் பல மூலிகைகளை நாம் தினசரி உணவிலும் பயன்படுத்தி வருகிறோம். பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன.
*1* அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்.
*2* ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்.
*3* ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு.
*4*தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு.
*5* நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்.
*6* நில வேம்பு: சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்.
*7* முடக்கத்தான்: மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்.
*8*வல்லாரை: ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை மலச்சிக்கல்.
*9*அஸ்வகந்தி: கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்.
*10* வில்வம்: பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்.
*11* நெல்லிக்காய்: பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்.
*11*நாவல் கொட்டை: சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்.
*13* சுக்கு: வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்.
*14* மிளகு: கபம், மூலவாயு, பித்தம், வாதம், அஜீரணம்.
*15*திப்பிலி: சளி, காசம், பீனிசம், வாயு.
🌿🍶🌿🍶🌿🍶🌿🍶🌿🍶🌿
Saturday, August 26, 2017
Food as a medicine in Tamil
*உணவே மருந்து* - *எளிய இயற்கை* *மருத்துவம்* :-
1) பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
2) சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3) பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
4) சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
5) வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
6) பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.
7) சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
8) பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது
9) தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
Beauty tips in Tamil
*அழகு🌿குறிப்புகள்*
*30 வயதில் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்ய எளிய இயற்கை மருத்துவம்*
30 வயதில் சருமம் பாதிப்படைந்து, புதிய செல்கள் உருவாவது குறைந்து போகிறது. எனவே, 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் சருமத்தின் சுருக்கத்தினை போக்குவதற்கு முட்டை ஒரு சிறந்த தீர்வு.
வயது ஏறிக் கொண்டே வரும்போது கொலாஜன் உற்பத்தி குறைவதால் தோலிற்கு அடியிலிருக்கும் கொழுப்பு படிவங்கள் கரைய ஆரம்பிக்கும். அதுவரை தோலிற்கு பிடிமானமாக இருந்த கொழுப்பு குறையும்போது, சருமம் தளர்வாக ஆரம்பிக்கும். இதனால்தான் வயதான தோற்றம் தருகிறது. இதனை தடுக்க சருமத்திற்கு கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும் வகையில் நல்ல புரத உணவுகளும், சருமத்தை இறுகும் பயிற்சி மற்றும் இயற்கை மருத்துவ செய்முறைகளை செய்தால் சருமம் இளமையாகவே காப்பாற்றப்படும்.
*1* முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து நன்றாக அடித்து அதனுடன் மசித்த வாழைப்பழம் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவை கலந்து முகத்தில் போடவும். அரை மணி நேரம் கழித்து குளிரிந்த நீரில் கழுவுங்கள். இந்த குறிப்பு சருமத்தில் புதிய செல்கள் உருவாவதற்கு தூண்டும். இது தளர்வடைந்த சருமத்தை இறுக்கி சுருக்கம் கருமை ஆகியவற்றை மறையச் செய்யும்.
*2* முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து அதனுடன் மசித்த அவகாடோவின் சதைப் பகுதி மற்றும் 1 டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழிவினால் முகம் சுருக்கமின்றி அழகாய் இருக்கும்.
*3*முட்டையில் வெள்ளைக் கருவுடன்A 1 ஸ்பூன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவவும்.
*4* முட்டையில் வெள்ளைக் கருவுடன் 2 ஸ்பூன் கடலை மாவு 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடவும். காய்ந்ததும் கழுவுங்கள்.
*5* முட்டையின் வெள்ளைக் கருவுடன் முல்தானி மட்டியை கலந்து பேக்காக முகத்தில் போடவும். சருமம் நன்றாக இறுகியவுடன் கழுவுங்கள்.
*6* கேரட்டை துருவி சாறெடுத்துக் கொள்ளுங்கள். 2 ஸ்பூன் கேரட் சாறுடன் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து முகத்தில் போடவும்.
Skin care tips in Tamil
*💦வாழைப்பழத் தோலில் இவ்வளவு அற்புதமா? 1/2 மணி நேரத்தில் ஏற்படும் மாற்றம்!*
வாழைப்பழத்தோலை கொண்டு நமது சருமத்தின் அழகை அதிகரிக்க செய்யலாம்.
அதற்கு வாழைப்பழத்தோலை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
வாழைப்பழத்தின் தோலை எப்படி பயன்படுத்தலாம்?
💧 வாழைப்பழத்தோலின் உட்பகுதியை நன்றாக முகத்தில் தேய்த்துக்கொண்டு 1/2 மணி நேரம் கழித்து, முகத்தை சுத்தமான நீரில் கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.
💧 வாழைப்பழத் தோலை சிறு துண்டாக வெட்டி பருக்கள் மற்றும் தழும்புகள் உள்ள இடங்களில் நன்றாக மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் கழித்து சூடான தண்ணீரில் நனைக்கப்பட்ட துணியால் முகத்திற்கு ஒத்திடம் கொடுத்தால், தழும்புகள் மற்றும் பருக்கள் விரைவில் மறையும்.
💧 வாழைப்பழத்தோலின் உட்பகுதியில் உள்ள வெள்ளை நார்ப்பகுதியை எடுத்து கற்றாழை ஜெல்லுடன் கலந்து கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கண்களில் உள்ள சுருக்கங்கள் மற்றும் வீக்கங்கள் குறையும்.
💧 வாழைப்பழத்தோலை தினமும் பற்களில் தேய்த்து வந்தால், பற்களின் மஞ்சள் கறைகள் நீங்கி, வெண்மையாக பளிச்சிடும்.
💧 உடம்பில் வலிகள் உள்ள இடங்களில் வாழைப்பழத் தோலை 1/2 மணி நேரம் வைத்திருந்தால் போதும், வலிகள் உடனே போய்விடும்.
💧 கொசுக்கள் கடித்து வீங்கி இருக்கும் இடத்தில், வாழைப்பழத்தின் தோலை நன்றாக தேய்த்தால், சிறிது நேரத்தில் சருமம் பழைய நிலைக்கு மாறிவிடும்.
About coffee in tamil
*ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்?*
காபி குடிப்பது உடம்புக்கு நல்லது என்று சிலர் கூறுகிறார்கள். ஒரு சிலர் அது உடம்புக்குப் பல்வேறு தீமைகளை உருவாக்கும் என்கிறார்கள். காபி நல்லதா, கெட்டதா என்ற கேள்விக்கு விடை தெரியாமலே காபி பிரியர்கள் கப் கப்பாக காபியை உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.
உண்மையில், காபி நல்லதா? காபியில் என்னதான் இருக்கிறது? ஒரு நாளைக்கு எத்தனை காபி குடிக்கலாம்? எவ்வளவு குடிக்கலாம்?
என்ற கேள்விகளுக்கான விடையை பார்க்கலாம்.
காபியில், கெஃபைன் (caffeine) என்னும் வேதிப்பொருளும் பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தாதுக்களும் உள்ளன. இவைதவிர பி காம்ப்ளெக்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவையும் நிரம்பியிருக்கின்றன.
காபியில் உள்ள கெஃபைன், நரம்பு மண்டலத்தைத் தூண்டும் (Central Nervous System Stimulant) பொருளாகச் செயல்படுகிறது. அதாவது, மூளையில் அடினோசின் (Adenosine) என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மனதை அமைதியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது. காபி குடிக்கும்போது அதில் உள்ள கெஃபைன், அடினோசின் ஆதிக்கத்தைக் குறைப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
ஒரு நாளைக்கு 250 மில்லி கிராம் கெஃபைன் உட்கொள்வது உடலுக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. கெஃபைனை ஏற்கும் அளவு, வயது, உடல்நிலை, வளரும் சூழலைப் பொறுத்து மாறுபடலாம். பொதுவாக, ஒரு கப் காபியில் 80-165 மி.லி கிராம் அளவு கெஃபைன் உள்ளது. ஒவ்வொரு வகையான காபியிலும், அதில் இருக்கும் கெஃபைன் அளவு மாறுபடுவதால், ஒருவர் இவ்வளவுதான் குடிக்கலாம் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.
காபியில் இருக்கும் கெஃபைன் குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது, உடல்நலப் பாதிப்புக்குக் காரணியாகிறது. மேலும், காபிக்கு அடிமையாகி அதிகமாகக் குடிக்கும்போது, கெஃபைன் உடலில் அதிகமாக சேரச்சேர பக்க விளைவுகள் அதிகமாகும்.
அது பல்வேறு பாதிப்புகள் ஏற்படக் காரணமாகிறது. குறிப்பாக, படபடப்பு, மன அமைதியற்ற நிலை, தூக்கமின்மை, தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகள் உண்டாகின்றன. பசியின்மை ஏற்படலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்குத் தலைச்சுற்றல் வரும் வாய்ப்புகள் அதிகம்.
12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான சத்துகள் கிடைக்க பால்தான் சிறந்தது. அதேநேரத்தில், தேயிலையில் கெஃபைன் அளவு குறைவாக இருப்பதால் டீ குடிக்கலாம். அல்சர், செரிமானப் பிரச்னைகள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் காபி குடிப்பதைத் தவிர்த்தல் நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்களும் சர்க்கரை சேர்க்காமல் காபி சாப்பிடலாம்.
காலையில் எழுந்ததும் குடிக்கலாம். சாப்பிடுவதற்கு முன்போ, பின்போ குடிக்கக் கூடாது. குறைந்தபட்சம் ஒரு மணி நேர இடைவெளி அவசியம். தூங்குவதற்கு முன்பாகக் காபி குடிக்கக் கூடாது. மேலும் தூக்கம் குறைவாக உள்ளவர்கள் காபியைத் தவிர்ப்பது நல்லது. தலைவலி மாத்திரையைக் காபியுடன் விழுங்கக் கூடாது. மாத்திரைகளின் வீரியத்தைக் காபி குறைத்துவிடும்.
காபியும் ஒரு வகையான உணவுப்பொருள்தான் என்கிறார்கள். அதேநேரத்தில், கண்டிப்பாக காபி குடித்தே தீர வேண்டும் என்று எதுவுமில்லை. ஆனால், அளவோடு இருந்தால் தீங்கில்லை என்றே இன்றைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆக, நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும் காபியை அளவுடன் பயன்படுத்தி வளமுடன் வாழ்வோம்.