Wednesday, September 20, 2017

 

Healthcare Tips-1 in Tamil

விஷம் இறங்க…!

கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து ஒரு அவுன்ஸ் மோரில் கலந்து குடித்தால் பாம்புகடி விஷம் உள்பட எந்த விஷ கடியானாலும் விஷம் இறங்கும்.

பெண்கள் இடுப்பில் புண் குணமாக…

பெண்கள் இடுப்பில் புடவை கட்டும் இடத்தில் இறுக்கி கட்டுவதால் ஏற்படும் புண் கடுக்காயை கல்லில் உரசி தடவி வந்தால் குணமாகும்.

குழந்தைகளுக்கு வயிற்று கோளாறு நீங்க…

முருங்கை இலையை கசக்கி சாறு எடுத்து சிறிது சூடுகாட்டி அரைசங்கு ஊற்றினால், வயிற்று உப்பிசம், மலக்கட்டு மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

வெட்டுக்காயம் குணமாக…

இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது போட்டு வர வெட்டுக்காயம் குணமாகும்.

ஆரம்ப கர்ப்ப சிதைவை தடுக்க…

கர்ப்ப தாய்மார்கள் அத்திபழம், தேன் சிறிதளவு உப்பு சேர்த்து உண்டு வந்தால் ஆரம்ப கர்ப்ப சிதைவிலிருந்து விடுபடலாம்

கண்கட்டி, கண்வலி குறைய !

சோற்றுக் கற்றாழை தோலைச் சீவி அதன் சிறிது ஜெல்லை தண்ணீரில் கழுவி கண் இமைகளுக்கு மேலே வைத்துக் கட்டி 5 நிமிடம் கழித்து எடுக்க கண்ணில் கட்டி, கண் வலி குறையும்.

சீரகம்:

சீரகத்தைப் பொன்வறுவலாக வறுத்து தூள் செய்து கொதிநீரில் இட்டு காய்ச்சிக் குடித்தால் உண்ட உணவை சீரணமாக்கி பசியைத் தூண்டுவதுடன் உணவுப்பாதையையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. கேரளத்து மக்கள் எல்லோரது வீட்டிலும் இந்த சீரக வெள்ளம் இருக்கும்.

தொண்டைக்கட்டிற்கு:

அதிமதுரத்தை நாட்டு மருந்து கடையில் வாங்கி இடித்து சலிக்கவும். ஒரு வேலைக்கு அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.

அஜீரணம்:

அரை ஸ்பூன் இஞ்சி சாறு, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் அஜீரனக் கோளாறுகள் மறையும்.

கால் ஆணிக்கு:

மருதாணி இலைகள், சிறிது வசம்பு, சிறிய மஞ்சள் துண்டு மூன்றையும் நன்கு அரைத்து ஒரு வெற்றிலையில் வைத்து கால் ஆணிடில் வைத்து ஒரு துணியால் கட்டி வந்தால் ஒரு வாரத்தில் குணமாகி விடும்.

தேமல் மறைய:

புடலங்காயை 6 அங்குலத்திற்கு வெட்டி, குடலை நீக்கி, சீயக்காயை அரைத்து அதனுள்ளே வைத்து, வெய்யிலில் ஒரு நாள் காய வைக்கவும். மறு நாள் அதை அரைத்து தேமல் உள்ள இடங்களில் தடவி இ மணி நேரம் ஊறவைத்து வெந்நீரில் குளிக்கவும். தொடர்ந்து இது போல செய்து வந்தால் சில தினங்களில் தேமல் மறைந்து விடும்.

தலைவலி:

ஒரு ஸ்பூன் கிராம்பையும் ஒரு சிட்டிகை கல் உப்பையும் அரைத்து பற்று போட்டால் தலைவலி சரியாகும்.

விக்கலுக்கு:

சீனியை வாயில் போட்டு மெதுவாக உறிஞ்சவும். விக்கல் நின்று விடும். 2 நிமிடம் கழித்து மறுபடியும் இது போல செய்யலாம். குழந்தைகளின் விக்கலுக்கு விரலை நீரில் நனைத்து சீனியில் தொட்டு வாயில் வைக்கவும்.

மலச்சிக்கல்:

வெங்காயத்தையும் முள்ளங்கியையும் அடிக்கடி சமையல் சேர்த்துக்கொள்ளவும். அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு சம பங்கு எடுத்து பவுடர் செய்து ஒரு ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து சாப்பிடவும்.

உட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு !

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
!
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள் !

இந்தியாவில் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

நாவல்பழக் கொட்டை
நாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

மாந்தளிர் பொடி
மாமரத்தின் தளிர் இலைகளை எடுத்து உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

வேப்பம்பூ பொடி
வேப்பம் பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவற்கொட்டை பொடி ஆகியவற்றை சேர்த்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

இசங்கு வேர்
இசங்கு வேரை உலர்த்தி பொடியாக்கி தினமும் 5 கிராம் அளவு தேனில் கலந்து உண்டு வந்தால் சுரம் மற்றும் விஷக்கடி நீங்கும். நீரிழிவு நோயாளிகள் இசங்குவேர் பொடியை நீரில் கலந்து அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

வெந்தையக் கீரை
வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும். வெந்தையக்கீரை சாப்பிடுவதன் மூலம் டைப் 1 டைப் 2 நீரிழிவு நோய் கட்டுப்படும் உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கிறது.

அவரைக்காய்
பிஞ்சு அவரைக்காயை நறுக்கி பொரியல் செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

பாதம் பருப்பு
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும்.

உடல் இளைக்க மோர்க்கூழ் !

உடல் இளைக்க டயட் என்பதை விட நல்ல ஹெல்த்தியான சாப்பாடு சாப்பிட்டாலே ஊளைச்சதையின்றி அழகாகவும், ஆரோக்யமாகவும் இருக்கலாம். அந்த வகையில் அடிக்கடி மோர்க்கூழ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அப்புறம் ஸ்லிம் ஆகிடுவீங்க.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 2 கப்
கோதுமை மாவு – 1 கப்
சோயா மாவு – 1/4 கப்
தண்ணீர் – 2 கப்
மோர் – 2 கப்
எண்ணெய் – 2 டீ ஸ்பூன்
கடுகு – 1 டீ ஸ்பூன்
பெருங்காயம் – 1/2 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
உ.பருப்பு – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, தண்ணீர் ஊற்றவும்.

* இப்போது உப்பைப் போட்டு கொதிவந்தவுடன், அரிசிமாவு, கோதுமை மாவு, சோயா மாவு மூன்றையும் கலந்து வைத்துக் கொண்டு, கொதிவந்த நீரில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்த மாவைப் போட்டுக் கிளறவும்.

* கொஞ்சம் கெட்டியானவுடன் மோர்விட்டு கைவிடாமல் கிளறிக் கொண்டேயிருக்கவும்.

* மோர் கூழில் ஒன்று சேர்ந்தவுடன் இறக்கி எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி கொத்தமல்லித் தூவி, துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

* முருங்கைக்காய் சாம்பார் தொட்டு சாப்பிட்டால் மிகமிக ருசியாக இருக்கும்.


Comments:
Thank you for your post. This is excellent information. It is amazing and wonderful to visit your site.
hair bonding in Hyderabad
hair treatment in Hyderabad
hair growth clinics in Hyderabad
dandruff treatment in Hyderabad
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?