Wednesday, September 20, 2017

 

Skin and Hair care Tips in Tamil

சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்

*தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும்,
மிருதுவாகவும் இருக்கும்.

*ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம்
கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து
வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்

*நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம்
கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும்
வெட்ட இயலும்.

*கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில்
கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு
பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி
அழகு பெறும்.

*தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை
சாறைபிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

*வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை
காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து,
பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால்,
முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

*கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து
அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க
வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும்,
சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற
வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

*இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி
எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து
முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம்
கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

*ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில்
தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

*முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு,
சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல்
ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

*மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

*பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20
நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

*ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன்
கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால்,
வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

*பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில்
தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

*தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து
நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.

*தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில்
உள்ள எண்ணைப் பசை குறையும்.

*தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிதுநேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.


Comments: Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?